மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

0
220
An additional amount for the beneficiary? Tamil Nadu government's action order!
An additional amount for the beneficiary? Tamil Nadu government's action order!

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படி  உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  மதிப்பூதியம் பெறுவோருக்கும் தனியாக சிறிய தொகை உயர்த்தி தரப்படும் எனவும் நிதி துறை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து ரூ. 2500 வரை பெரும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஐம்பது  ரூபாய் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ 2500க்கும் மேலாக பெரும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் நூறு ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்ட இந்த தொகையை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர் தேக்க  தொட்டி போன்றவைகள்  இயக்குபவர்களும் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்
Next articleவெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!