முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் கருங்காலி கட்டை!!..

0
359

முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் கருங்காலி கட்டை!!..

 

குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் வழிபாட்டை எவர் ஒருவர் முறையாக செய்து வருகிறார்களோ அவர்களை கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளால் ஒன்றும் செய்ய முடியாது. மேலும் நவகிரகங்களும் துணை நிற்கும்.நம் குலதெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் அப்படி ஒரு சக்தி இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் தெய்வங்கள் என்று பல மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் தான் இருக்கும்.

உங்கள் குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் அருள் இல்லையென்றால் அந்த வீட்டில் நீங்கள் பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் எந்தவொரு பலனும் கிடைக்காது. குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருளை பெற்றிடவும், குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அற்புத சக்தி வாய்ந்த ஒரு வரப்பிரசாதம் கருங்காலி கட்டை.

இதை எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று பார்ப்போம்! அதீத சக்தி பெற்ற கருங்காலி கட்டை ஒன்றை வீட்டில் வைத்து பசும்பாலால் சுத்தம் செய்து கட்டையின் மேற்புறத்தில் சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின் நாணயம் மூன்றை எடுத்து குங்குமம் இட்ட இடத்தில் வைத்து, மலர் மாலை ஒன்றை சாற்றி பின்னர் தீபம் காட்டும் போது குலதெய்வத்தின் மகிமை கருங்காலி கட்டையினுள் இறங்கும்.கருங்காலி கட்டையை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.

நீங்கள் எந்த பிரச்சனைகளில் இருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கக்கூடிய வழியை குலதெய்வம் நிச்சயம் காட்டும்.

குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் வேண்டிய வரம் பெறலாம். உங்களது குலதெய்வம் வசியம் செய்யப்பட்டு உங்களுக்கு அருள்புரிவார்கள். அத்தகைய ஆற்றல் கருங்காலிக்கு உண்டு.

மின் கதிர்வீச்சுகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி வாய்ந்த மரம் கருங்காலி கட்டை கோபுர கலசத்தினுள் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாகவும் தீராத பிணிகளுக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது. மகத்துவம் வாய்ந்த கருங்காலி கட்டையை வைத்து வழிபட்டு குலதெய்வத்தின் அருளை பெற்று இன்பமுடன் வாழுங்கள்.

 

 

 

 

Previous articleசிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்!
Next article14-7-2022- இன்றைய ராசி பலன்கள்!