கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை!

Photo of author

By Parthipan K

கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை!

Parthipan K

An eight-year-old student was brutally murdered because he saw the fun!

கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் தான் உதய் கிரண.இவருடைய வயது 8. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். நன்றாக படித்து வந்த இவர் திடிரென கடந்த 12 ஆம்  தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார்   வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிறுவனின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சகாதேவன், ராஜேஸ்வரி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.இவ்விசாரணையில் போலீசார் கூறுகையில், சகாதேவன் மற்றும் ராஜேஸ்வரி இவரும் கள்ளக்காதலர்கள் என்பது விசாரணையில் தெரியவந்து.

இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை சிறுவன் உதய் கிரண் நேரில் பார்த்து உள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலர்கள் நீ இங்கு பார்த்ததை  வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவுள்ளனர். அதற்கு அந்த அப்படித்தான் சொல்லுவேன் என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலர்கள் சிறுவனின் பிறப்பு உறுப்பு மீது சரமாரியாக தாக்கினார்கள்.பின்னர் அந்த சிறுவனை கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர். பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் நள்ளிரவு எடுத்துச் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மரத்தில் தொங்க விட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சகாதேவன் மற்றும் ராஜேஸ்வரி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும் அவர்கள் இருவரையும் போலீசார்கள் கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.