சுவாசப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

0
140

சுவாசப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

தற்போது உள்ள சூழலில் சுற்றுப்புற மாசு மற்றும் காலநிலை மாற்றங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

சளி, இரும்பல், மூச்சு திணறல் பிரச்சினைகள் எந்த சூழ்நிலையிலும் வரக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தான் சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தேவைப்படும் பொருட்கள்:இரண்டு கொய்யா இலை, ஐந்து மிளகு, இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு துண்டு அளவிற்கு சுக்கு.

கொய்யா இலையில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது குறிப்பாக இதில் ஆன்ட்டி வைரல், ஆன்ட்டி பாக்டீரியல் போன்றவைகள் உள்ளது. கொய்யா இலையை பயன்படுத்தும் பொழுது நமக்கு நுரையீரல் பிரச்சனைகள் நீங்கும்.

மிளகில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கிராம்பை பயன்படுத்தும் பொழுது நமக்கு வரக்கூடிய அனைத்து சுவாச பிரச்சினைகளை குணப்படுத்தும். ஏலக்காய் பல்வேறு குணங்களை கொண்டுள்ளது.

முதலில் இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் கொய்யா இலையை கிள்ளி சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் மிளகு, கிராம்பு, சுக்கு, ஏலக்காய் அனைத்தையும் நுணுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை கொதிக்க வைக்க வேண்டும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் வரும் முறை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதன் மூலம் இரும்பல் சளி காய்ச்சல் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபடலாம்.

Previous articleஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!
Next articleரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன்! நன்மைகள் உண்டாகும் நாள்!