அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய இஸ்லாமியர்!
இராமநாதபுரம் பங்குனி உத்திர திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் பக்தர்களை நெகிழ செய்யும் விதமாக இஸ்லாமியர் ஒருவர் அழகு குத்தி வரும் பக்தர்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போட்டு ஆடிய காட்சி பார்ப்போரை நிகழச் செய்தது.
இன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் வெகு சிறப்பாக விழா நடந்து வருகிறது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், குயவன் குடி,வேதாளை உள்ளிட்ட பல்வேறு முருகன் ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய அருகில் உள்ள அருள்மிகு வழிவிடு முருகன் ஆலய 83-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கடைசி நாளான இன்று ராமநாதபுரம் அரண்மனை அருகில் உள்ள நொச்சியூரணி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து அதிகாலை 4 மணி முதல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழகு குத்தியும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த இஸ்லாமியர் சாகுல் ஹமீது என்பவர் அலகு குத்தி வரும் பக்தர்கள் முன்பு சாம்பிராணி புகை போட்டு அவர்களுடன் சேர்ந்து ஆடிய காட்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் பக்தர்களை நெகிழச் செய்யும் விதமாக அமைந்தது.
இந்த நிகழ்வானது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.