பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! நாளை ரேசன் கடைகள் இயங்காது..!! தமிழக அரசு சொன்ன விளக்கம் இது தான்..!!

Photo of author

By Divya

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! நாளை ரேசன் கடைகள் இயங்காது..!! தமிழக அரசு சொன்ன விளக்கம் இது தான்..!!

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும், எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவைகள் மலிவு விலைக்கும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகளை உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகள் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த ரேசன் கடைகளுக்கு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கி வரும் தமிழக அரசு பண்டிகை காலங்களில் அதற்கு ஏற்றார் போல் ரேசன் கடைகளில் ரேசன் கடைகளை திறந்து பொருட்கள் வழங்கி வரும் நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு ரேசன் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நவம்பர் 5(ஞாயிற்று கிழமை) மற்றும் நவம்பர் 10(வெள்ளிக்கிழமை) உள்ளிட்ட நாட்களில் ரேசன் கடைகள் விடுமுறை இன்றி இயங்கி வந்தது.

இந்நிலையில் அந்த விடுமுறை நாட்களில் நடைபெற்ற பணிக்கான விடுமுறையை ஈடு செய்யும் விதமானாக நவம்பர் 13 தேதி (திங்கட் கிழமை) மற்றும் நவம்பர் 25(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு ரேசன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நவம்பர் 13 அன்று ரேசன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை அதாவது நவம்பர் 25 ஆம் தேதி ரேசன் கடைகள் இயங்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.