முதல்வரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!

Photo of author

By Parthipan K

சாலை விபத்தில் காயமடைந்தவரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வொய்யாறிலிருந்து கன்னாவரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் பலத்த காயமடைந்த அவரை விஜயவாடாவில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆம்புலன்ஸ் வருவதை அறிந்து தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழிவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.