போன உயிரை மீட்டெடுக்கும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்! மிக முக்கிய பதிவு!

0
88

போன உயிரை மீட்டெடுக்கும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்! மிக முக்கிய பதிவு!

உலகத்திலேயே மீட்டெடுக்க முடியாதது, போனால் திரும்ப வராதது மனித உயிராகும்.திடீரென்று உயிரிழக்கும் மனிதர்களின் உயிரை முதல் ஐந்து நிமிடத்தில் காப்பாற்றுவதற்கான செய்யும் முதல் உதவியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.இந்த முதல் உதவியை சாதாரண மனிதர்களும் செய்யலாம்.ஒரு மருத்துவரின் வழிகாட்டுதல்படி சிபிஆர் முதலுதவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளலாம்.

முதலில் கவனிக்க வேண்டியவை!

முதலுதவி செய்யும் நீங்கள் எந்தவித பயமும் பதட்டமும் அடையக் கூடாது.அப்பொழுதுதான் உங்களால் இன்னொருவரின் உயிரை காப்பாற்ற முடியும்.

போன உயிரை மீட்டு எடுக்க முதல் ஐந்து நிமிடத்தில் நாம் செய்ய வேண்டியவை!

மூச்சு நின்றுவிட்டாலோ திடீர் என்று இதயம் நின்று விட்டாலோ அதை மறு ஓட்டம் செய்வதற்கு மீண்டும் அவற்றை செயல்பட வைப்பதற்கான ஒரு அற்புதமான வழி தான் இந்த சிபிஆர் என்று சொல்லக்கூடிய Cardiopulmonary resuscitation (cpr)
இந்த முதல் உதவியை யாரெல்லாம் கொடுக்கலாம் என்றால்,திடீர் உயிரிழப்பு ஏற்படும் அல்லது திடீர் மரணம் அடைந்தவர்களுக்கு இந்த சிபிஆர் வேலை செய்யும்.

குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீதம் ஒரு நபரை காப்பாற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.நல்ல முறையான சிபிஆர் முதலுதவி கொடுக்கும் பொழுது.இதனை எப்படி என்று கற்றுக்கொள்ளலாம்!

திடீரென்று ஒருவருக்கு பேச்சு மூச்சு இல்லை என்றால்,அவரை ஒரு சமமான பகுதியில் வெறும் தரையில் படுக்க வைக்க வேண்டும்.பின்னர் கை மற்றும் இதயம் மற்றும் கழுத்தின் சைடு பகுதியில் பல்ஸ் உள்ளதா என்று கை வைத்து பார்க்க வேண்டும்.

பல்ஸ் இல்லை என்று தெரிந்து விட்டாலே உங்கள் கவனம் இதயத்திற்கு செல்ல வேண்டும்.இறந்தவரின் இரண்டு மார்பகங்களுக்கு இடையே உள்ளங்கையை வைத்துக்கொள்ள வேண்டும்.அடுத்ததாக அந்த கையின் மீது உங்களின் இன்னொரு கையை விரலிடுக்கில் பின்னும் படி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் முதலுதவி செய்பவர் முட்டி வளையாமல் நேராக வைத்து உங்களின் உடலின் மொத்த எடையும் உள்ளங்கைக்கு வரும் அளவிற்கு நின்று கொள்ளவேண்டும்.இதன் பிறகு நீங்க அவரின் மார்பு பகுதியை நன்றாக அழுத்த வேண்டும்.அந்த அழுத்தமானது ஒன்று முதல் இரண்டு இன்ச்க்கு எலும்புக்கூடானது உள்ளே போயிட்டு வரும் அளவிற்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் .நீங்கள் கொடுக்கும் அழுத்தம் சாதாரணமாக இருப்பின் எந்த பயனும் இல்லை.எனவே அழுத்தம் நன்றாக கொடுக்க வேண்டும்.

இந்த அழுத்தத்தை நாம் ஒரு நிமிடத்திற்கு 100 முறை கொடுத்திருக்க வேண்டும்.இந்த 100 அழுத்தம் கொடுத்தபிறகு
உடனடியாக அடுத்து செய்ய வேண்டியது,அவரின் வாயை முதலில் திறந்து பாருங்கள்,நாக்கு ஏதாவது சுருண்டு இருக்கின்றதா என்று பார்த்துவிட்டு,நீங்கள் உங்கள் மூச்சுக்காற்றை செலுத்தலாம்.

முதலில் முதலுதவி செய்பவர் நன்றாக மூச்சு காற்றை இழுத்துக் கொள்ளவேண்டும்.பின்னர் முதலுதவி பெறுபவரின் தலையை லைட்டாக தூக்கி கொள்ளவேண்டும்.பின்னர்,
அவரின் இரண்டு மூக்கு துவாரத்தையும் அடைத்துக்கொண்டு அவரின் வாயை திறந்து உங்கள் மூச்சுக் காற்றை நன்றாக
உட்செலுத்துங்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்,முதலுதவி பெறுபவரின் மூக்கு துவாரத்தை கண்டிப்பாக அடைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் உட்செலுத்தும் மூச்சுக் காற்றானது அவரின் மூக்கு துவாரத்தின் வழியே வெளியே வந்துவிடும்.இந்த முதல் உதவியானது நின்ற நுரையீரலை செயல்பட வைக்கும் ஒரு முறையாகும்.

பின்னர் அவரிடம் ஏதேனும் அசைவுகள் இருக்கின்றதா என்பதனை பாருங்கள் இல்லை என்றால் மீண்டும் இரண்டு மார்பகங்களுக்கு இடையே மேலே சொன்னதை போல் அழுத்தம் கொடுங்கள்.தற்போது கூறியதெல்லாம் இரண்டு நிமிடங்களில் முதலுதவி செய்பவர் நடத்தி முடிக்க வேண்டிய செயலாகும்.நீங்கள் இந்த முதலுதவி செய்யும் பொழுதே சிலருக்கு இதயத்துடிப்பு வந்து விடலாம் அல்லது அதற்குள்ளாகவே மருத்துவர்கள் அவ்விடத்தை அடைந்து விடுவார்கள்.அவர்கள் அடுத்த கட்ட சிகிச்சைக்கு செல்வதற்கு இந்த முதலுதவி ஏதுவாக இருக்கும்.

இதனை உங்கள் வீட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சொல்லி கொடுங்க.ஏதாவது ஒரு சூழலில் இந்த முதலுதவி முறையானது நமக்கு கை கொடுக்கும்.

author avatar
Pavithra