முகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!!

0
214
#image_title

முகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!!

நம்முடைய முகத்தில் ஏற்படும் முகப்பருக்களை குறைக்க உதவும் சோம்பு பால் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சோம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த சோம்பை நாம் முகத்தில் வரும் முகப்பருக்களை குறைக்க பயன்படுத்தலாம். நல்ல செரிமானத்திற்கு உதவும் வகையில் சோம்பை நாம் மருந்தாக பயன்படுத்தலாம். சோம்பு பால் அருந்தும் பொழுது சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கூட கிடைக்கின்றது.

சோம்பில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. பாலில் கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. இவை இரண்டும் சேரும் பொழுது நமது உடலில் செரிமான மண்டலம் வலிமை பெறுகின்றது. மேலும் எலும்பு ஆரோக்கியம் பெறுகின்றது. அடுத்து சோம்பு பால் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

இதற்குத் தேவையான பொருட்கள் மூன்று பேருக்கும் மட்டும் தான்.

* பால்
* சோம்பு
* சர்க்கரை அல்லது வெல்லம்

செய்முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதன் பின்னர் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பால் லேசாக கொதிக்கத் தொடங்கும் பொழுது சோம்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கொதிக்க வைத்து இறக்கினால் சோம்பு பால் தயார். இந்த சோம்பு பாலில் சுவைக்காக சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இந்த சோம்பு பாலை குடிப்பதன் மூலமாக இரத்தம் சுத்தப்படுத்தப்படுகின்றது. இதனால் முகப்பருக்கள் போன்ற சருமம் பிரச்சனைகள் அனைத்தும் குணமடைக்கின்றது.

Previous articleஅடேங்கப்பா.. முருங்கை கீரையில் சூப் செய்து பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
Next article5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து! அரையிறுதிக்கு தகுதி பெறுமா!!