திமுக வின் அடுத்த FILE ஐ தயார் செய்த அண்ணாமலை!! வெளுத்து வாங்கும் ஆக்ரோஷ பேச்சு!!

Photo of author

By CineDesk

திமுக வின் அடுத்த FILE ஐ தயார் செய்த அண்ணாமலை!! வெளுத்து வாங்கும் ஆக்ரோஷ பேச்சு!!

CineDesk

Annamalai prepared DMK's next FILE!! Aggressive speech that buys white!!

திமுக வின் அடுத்த FILE ஐ தயார் செய்த அண்ணாமலை!! வெளுத்து வாங்கும் ஆக்ரோஷ பேச்சு!!

பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது செய்தியாளர்களிடம் திமுகவை பற்றி வெளுத்து வாங்கி உள்ளார். அவர் கூறியதாவது, நாங்கள் திமுக அமைச்சரை போன்று நெஞ்சை பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் போய் உட்கார்ந்துக் கொள்ள மாட்டோம்.

நின்று எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்போம், திருப்பி பதில் கேள்விகளையும் கேட்போம். இதற்கு காரணம் என்னவென்றால் நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் நடக்கின்ற யுத்தம் தான்.

இதில் முதல் தலைமுறை சிறிது கடினப்பட்டு தான் வெற்றி பெற முடியும். உங்களிடம் பண பலம், அதிகார பலம், படைபலம் இருக்கிறது என்றால் எங்களிடம் மக்கள் பலம் இருக்கிறது. மக்கள் பலம் தான் அனைத்தையும் விட சிறந்தது என்று நாங்கள் காட்டுவோம்.

திமுகவினரின் பைல்ஸ் பாகம் இரண்டு தயாராக உள்ளது. இதில் இருப்பது பினாமி சொத்துக்கள். இந்த பினாமிகளின் பெயரை வெளியே கூறி விடுவதா இல்லை ஆளுநரிடம் இதை ஒப்படைத்து விடுவதா?

ஏனென்றால், தமிழகத்தில் சிபிஐ அனுமதியை இவர்கள் எடுத்துக்கொண்டு, சிபிஐக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை இவர்களே செய்து வருகிறார்கள். முதல்வரின் மீதே சிபிஐ புகார் கொடுத்திருந்தோம்.

அந்த துறையை தற்போது திமுக எடுத்துக்கொண்டதால் முதல்வர் இதிலிருந்து தப்பிக்க முடியாது. எனவே, இந்த பினாமிகளின் பெயர்களை பொதுவாக கூறி விடலாமா? ஆளுநரிடம் ஒப்படைக்கலாமா? அல்லது டிஜிபி இடம் ஒப்படைக்கலாமா? என்று கலந்தாய்வு செய்து வருகிறோம்.

இதனைத்தொடர்ந்து திமுக வின் பைல்ஸ் பாகம் ஒன்றை பொறுத்தவரை 13 பேரின் சொத்து விவரங்களை கூறி உள்ளோம். பாகம் இரண்டில் பினாமிகளின் நில விவரங்கள், அவர்களின் பேரில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் முதலியவை பற்றி கூறி இருக்கிறோம்.

இதற்கு எல்லாம் கண்டிப்பாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் நான் பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருக்கிறார்.