திமுக மீது நம்பிக்கை கொள்ளும் அண்ணாமலை!! 32 மாதங்களில் நடக்கப்போவது என்ன??

Photo of author

By CineDesk

திமுக மீது நம்பிக்கை கொள்ளும் அண்ணாமலை!! 32 மாதங்களில் நடக்கப்போவது என்ன??

CineDesk

We know everything you don't interfere!! Annamalai gave the bulb to Stalin!!

திமுக மீது நம்பிக்கை கொள்ளும் அண்ணாமலை!! 32 மாதங்களில் நடக்கப்போவது என்ன??

தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணமாலை சில கருத்துக்களை கூறி உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 26 மாதங்கள் முடிந்துள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் சொல்லும்படி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.

இவர்களின் ஆட்சிக்கு நூற்றுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கூட தர முடியாது. ஆனால் மக்களின் குரலாக பாஜக எப்போதுமே குரல் கொடுக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசு தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லும் கர்நாடக அரசை பற்றி பேசுவதற்கு தகுதி அல்ல.

மேலும், பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட தொகையையும் அவர்களிடம் வழங்க வில்லை. டாஸ்மாக்கை முறைப்படுத்தவில்லை என்று மொத்தம் பத்து குற்றச்சாட்டுகளை மக்களிடம் வைத்துள்ளோம்.

ஆனால் இன்னும் திமுக அரசிற்கு பாதி ஆட்சி அதாவது 32 மாதங்கள் முழுதாக இருக்கிறது. அது முடிவதற்குள் மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

மேலும், தற்போது இந்தியாவில் மின் கட்டணம் மிகவும் உயர்ந்து வருகிறது. 26 மாதங்களில் மொத்தம் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்திருப்பது இந்திய வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தை பெரிதளவில் நடத்தாமல் சிறிய அளவில் நடாத்துமாறு தலைவர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த ஆரப்பட்டம் நடைபெறுகிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணமலை கூறி உள்ளார்.