மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் தேர்ச்சி அடைந்த பெண்கள் 96.38 சதவிகிதம் ஆகவும், சிறுவர்கள் 91.45 சதவிகிதம் ஆகவும் பதிவாகி உள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
தற்போது மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக தமிழகம் முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி விட்டது. எனவே 2023-2024 ஆம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் கூறி உள்ளது.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் ஜூலை பத்தாம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விருப்பம் உள்ள மாணவ, மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கூறப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் முடிவடைந்த பிறகு அனைவருக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.