விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! பயணிகள் இதனை இனி பின்பற்ற கட்டாயம் இல்லை!
கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
மேலும் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கபட்டு மாணவர்கள் நேரடியாக சென்று தேர்வு எழுதினார்கள்.
அதனையடுத்து கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் சற்று குறைந்ததால் மக்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றினால் போதும் இல்லையெனில் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.கடந்த மாதம் அந்த கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது.
தற்போது விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கொரோனா பரவல் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் பயணிகள் அவரவர்களின் பாதுகாப்பிற்கு முக கவசம் அணிந்து வருவது சிறந்தது எனவும் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.