திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு!
திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து திருத்தலங்களுக்கு மூடப்பட்டிருந்தது.சிறப்பு பூஜைகள் அனைத்தும் நான்கு அல்லது ஐந்து நபர்களுடன் மிகவும் எளிமையாக செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உலகில் அதிகளவு மக்கள் கூட்டம் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி.கடந்த புராட்டாசி மாதத்தில் இருந்தே மக்கள் அதிகளவு வர தொடங்கி உள்ளனர்.மேலும் பல்வேறு வகையான சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றனர்.அதனால் மக்கள் அதிகளவில் வருவதால் டைம் ஸ்லாட் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.அதன் மூலம் பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் ஓரளவு பக்தர்கள் கூட்ட நெரிசல் குறைக்கப்பட்டது. மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் ஆத்யாயன உற்சவம் நடத்துவது வழக்கம்.அந்த வகையில் நடப்பாண்டில் ஆத்யாயனா உற்சவம் வரும் வியாழக்கிழமை அதவாது டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை 25 நாட்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த விழா வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெறும் விழாவாகும்.மேலும் நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாசுரங்கள் எனப்படும் 12 ஆழ்வார்கள் எழுதிய 4 ஆயிரம் பாசுரங்கள் இந்த 25 நாட்களிலும் வைஷ்ணவர்களால் தினமும் பாடப்படும் என கூறப்படுகின்றது.
தொடர்ந்து 25 நாட்கள் நடக்கும் விழாவில் முதல் 11 நாட்கள் பகல் பத்து எனவும் அடுத்த பத்து நாட்கள் ராப்பத்து எனவும் அழைக்கப்படுகின்றனர்.இதனை தொடர்ந்து 22 வது நாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு, 23 வது நாள் ராமானுஜ நூற்றந்தாதி 24 வது நாள் வராஹ சாமி சாத்துமுறை, 25 வது நாளாக ஆத்யாயன உற்சவம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.