காலை பிடித்த பாமக எம்எல்ஏ.. கண்டுகொள்ளாத எடப்பாடி!! மேடைக்கு வந்த கூட்டணி பிரச்சனை!!   

0
105
Pamaka MLA who liked the morning. The alliance that came to the stage is a problem!!
Pamaka MLA who liked the morning. The alliance that came to the stage is a problem!!

காலை பிடித்த பாமக எம்எல்ஏ.. கண்டுகொள்ளாத எடப்பாடி!! மேடைக்கு வந்த கூட்டணி பிரச்சனை!!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் கபடி உள்விளையாட்டு அரங்கம் வேலையானது பல நாட்களாக நடந்து வந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் பல தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் இவ்விழாவில் பங்கேற்றார்.

மேடையில் எடப்பாடி பழனிச்சாமி நின்று கொண்டிருந்த நிலையில் பாமக எம்எல்ஏ அருள் திடீரென்று எடப்பாடி அவர்களின் காலில் விழுந்தார். உடனே எடப்பாடி அவர்கள் அவரை தூக்கிவிட்டு வாழ்த்து தெரிவித்ததை அடுத்து பாமக அருள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் அலைமோதிய வழியே இருந்தார்.

உடனடியாக எடப்பாடி அடுத்தடுத்த நபர்களை கண்டு வந்த நிலையில் இவரை சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு தன்னை கண்டு கொள்ளவில்லை என்று அறிந்த பாமக எம்எல்ஏ அருள் அவர் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் முன்பே அங்கும் இங்குமாக சென்றார்.

பின்பு எடப்பாடி பழனிச்சாமி பாமக எம்எல்ஏ அருள் அவர்களுக்கு சால்வை அணிவிக்கும் படி கூறியதையடுத்து அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. சமீப காலமாக பாமக அதிமுக கூட்டணி குறித்து சந்தேகத்துடன் பேசி வரும் நிலையில், இவ்வாறு பாமக எம்எல்ஏ எடப்பாடி காலில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் பேட்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் , பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் தான் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று திட்டவட்டமாக கூறினார். இதை வைத்து பார்க்கையில் இவர் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து விலகப்போவதாகவும், திமுக அல்லது பாஜகவுடன் இணையப் போகிறார் என்று பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது.

அதிமுகவானது  ஒற்றை தலைமை என்ற விவகாரத்தில் ஈடுபட்டிருக்கும் சூழலில், நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அண்ணாமலை அவர்கள், கூட்டணி வேண்டுமானால் இருப்போம் அதற்காக அதிமுக கூறும் அனைத்தையும் ஏற்க முடியாது என்று கூறி பல நிபந்தனைகளுடன் கைவிரித்தது எடப்பாடிக்கு பலத்த அடியாக இருந்தது.

தற்பொழுது பாமக தலைவரும் இவ்வாறு கூறியிருந்தது அவருக்கு அடுத்தடுத்து சரிவையே ஏற்படுத்தியது. அந்த வகையில் பாமக எம்எல்ஏ அருள் அவர்கள் காலில் விழுந்தும் அவரை கண்டுகொள்ளாதபோல் இருந்தது தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பேச்சு பொருளாக மாறி உள்ளது.பாமகவுடனான கூட்டணி கட்சி இனி இல்லை என்பதை சொல்லாமல் சொன்னது போல் உள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.