அமெரிக்காவில் உயிரிழந்த மற்றுமொரு இந்திய மாணவன் – கொலை செய்தது யார் ?, தொடரும் விசாரணை!!

0
337
#image_title

அமெரிக்காவில் உயிரிழந்த மற்றுமொரு இந்திய மாணவன் – கொலை செய்தது யார் ?, தொடரும் விசாரணை!!

அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் படித்து வந்துள்ளார். அபிஜீத் பரிச்சுரு(20). ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தன்னுடன் பயிலும் சக மாணவனுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார் என்று தெரிகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள காட்டு பகுதியில் அபிஜீத் பரிச்சுரு உயிரிழந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இவரை யார் கொலை செய்தது ? எதற்காக? என்பது குறித்த விசாரணைகளை தற்போது அமெரிக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

அபிஜீத் பரிச்சுரு வீட்டிற்கு ஒரே மகனாவார். இவரது மரண செய்தி கேட்டு அவரது தாய் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். தாயின் எதிர்ப்பினை மீறி இவர் தனது மேல்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. தற்போது அபிஜீத்தின் உடல் அவரது சொந்த ஊரான குண்டூருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் கூட, கொல்கத்தாவை சேர்ந்த அமர்நாத் கோஷ் என்னும் நடன கலைஞர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். நடப்பாண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களை காணொளி மூலம் அணுகி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

Previous articleதமிழக முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்களை அச்சிட்ட பனியன்கள் பறிமுதல் – ராமநாதபுரத்தில் பரபரப்பு சம்பவம்!!
Next articleமதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!!