சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி!

Photo of author

By Rupa

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி!

கடந்த சில ஆண்டுகாலமாக மக்கள் பல இன்னல்களை முன் வந்து சொல்ல துணிந்துள்ளனர்.அந்த பட்டியலில் பாலியல் வன்கொடுமையும் ஒன்று.பல பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல சவால்களை எதிர் கொண்டு முன்னேறி செல்கின்றனர்.அவற்றில் முக்கியமானது பாலியல் வன்கொடுமை.முன்பு பெண்களுக்கு இவ்வாறான வன்கொடுமைகள் நடக்கும் போது எவரும் சொல்ல முன் வந்ததில்லை.தற்போது பெண்கள் துணிச்சலுடன் சொல்ல முன் வந்துள்ளனர் என்பது பாராட்டிற்குரியது.

அவ்வாறு சொல்ல ஆரம்பித்த நாட்களிலிருந்தே நாம் அதிகமாக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தான் பல குற்றங்களில் குற்றவாளியாக மாட்டுகின்றனர்.பெற்றோர்கள்,பிள்ளைகள் கல்வி கற்பதற்காக பள்ளிகளை நம்பியும் அங்குள்ள ஆசிரியர்களை நம்பியும் அனுப்புகின்றனர்.பிள்ளைகளும் பெற்றோர்களிடம் அதிக நேரத்தை செலவழிப்பதை விட பள்ளிகளிலே அதிகப்படியான நேரத்தை செலவழிக்கின்றனர்.அவ்வாறு நம்பப்படும் ஆசிரியர்களே பிள்ளைகளிடம் தவறாக நடந்து கொள்கின்றனர்.

அந்தவகையில் பல பள்ளிகளில் பெண் பிள்ளைகள் தங்கள் ஆசிரியர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அவற்றில் ஒன்றான சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.அம்மாணவிகள் கூறியது,தேர்வு எழுதுவதற்கு முன்பு சிவசங்கர் பாப-விடம் ஆசி பெற்றால் நன்கு மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அவரது ஆசிரமத்திற்கு அழைத்து செல்வார்.அப்பொழுது சிவசங்கர் பாப எங்களை தனி அறையில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்வார்.இதனை நாங்கள் எங்களது பெற்றோர்களிடமோ அல்லது வெளியே சொல்ல நேர்ந்தாலோ எங்களது படிப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் நங்கள் வெளியே சொல்லவில்லை.

தற்போது இது எல்லை மீறி நடப்பதால் வெளியே சொல்லும் கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுளோம் என்று கூறியுள்ளனர்.இந்த புகாரானது தமிழ்நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறையும் அளவிற்கு தள்ளப்பட்டது.மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது 2 வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.மீண்டும் தற்போது சிபிசிஐடி இவர் மீது மூன்றாவது போக்சோ வழக்கு போட்டுள்ளனர்.மூன்றாவது போக்சோ வழக்கு போடப்பட்ட சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.