பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல்

0
126
#image_title

பாஜக-வுக்கு மற்றொரு இழப்பு : நேதாஜியின் பேரன் கட்சியில் இருந்து விலகல்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ் அவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகி உள்ளார். இதுகுறித்து பாஜக தலைமையிடத்தில் தனது ராஜினாமா கடிதத்தையும் வழங்கி உள்ளார். அதில் பாஜக கட்சி உடன் தனது கொள்கை ஒத்துப்போகவில்லை என ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு சந்திர குமார் போஸ் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர்

மேற்கு வங்க மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் இணைந்த உடனே, மிகப்பெரிய பொறுப்புகள் அவரை தேடி வந்தன.

2019 ஆம் ஆண்டு அப்போது ஆட்சி செய்த பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பாஜக கட்சியை சேர்ந்த சந்திரகுமார் போஸ் அவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது இருந்தே பாஜக கட்சிக்கும் சந்திரகுமார் போஸ் அவர்களுக்கும் மோதல் உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களிலும் பாஜக கட்சிக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. பாஜக தலைமையிடம் எடுக்க முடிவுகளுக்கு சந்திரபோஸ் அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால்

பாஜக கட்சிக்கும் இவருக்கும் இடையேயான விரிசல் பெரிதாகி வந்தது.

இந்நிலையில் தற்போது சந்திரபோஸ் அவர்கள் பாஜக கட்சியில் இருந்து விலகி உள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இழக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறப்பட்டு வந்த நிலையில் அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleநடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா?
Next articleஒரு பிஸ்கெட் இல்லாததால் ஐடிசிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது!!!