ஒரு பிஸ்கெட் இல்லாததால் ஐடிசிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது!!!

0
34
#image_title

ஒரு பிஸ்கெட் இல்லாததால் ஐடிசிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது!!!

வழக்கமாக விற்கப்படும் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் வழக்கத்துக்கு மாறாக ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் நுகர்வோர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரபல நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து. அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னைக்கு அடுத்துள்ள மணலியில் டில்லி பாபு என்ற நுகர்வோர் ஒருவர் நாய்களுக்கு உணவளிக்க சன்பீஸ்ட் மேரி லைட் என்னும் பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கினார். இந்த சன்பீஸ்ட் மேரி லைட் பிஸ்கெட் பிரபல ஐடிசி நிறுவனத்தின் தயாரிப்பாகும். ஒரு பாக்கெட் சன்பீஸ்ட் மேரி லைட் பிஸ்கெட்டின் விலை 24 ரூபாய் ஆகும்.

வழக்கமாக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் 16 பிஸ்கெட்டுகள் இருக்கும். ஆனால் டில்லி பாபு வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டில் வழக்கத்துக்கு மாறாக ஒரு பிஸ்கெட் குறைவாக அதாவது 16 பிஸ்கெட்டுகளுக்கு பதிலாக 15 பிஸ்கெட்டுகள் இருந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் டில்லி பாபு விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் எந்த விளக்கமும் தரவில்லை என்றதால் டில்லி பாபு அவர்கள் நுகர்வோர் நீதி மன்றத்தில் புகார் அளித்தார்.

டில்லி பாபு அளித்த புகாரில் “நான் தற்பொழுது வாங்கிய சன்பீஸ்ட் மேரி லைட் பிஸ்கெட் பாக்கெட்டில் 15 பிஸ்கட்டுகள் தான் இருக்கின்றது. ஆனால் இதில் வழக்கமாக 16 பிஸ்கட்டுகள் இருக்கும். தற்பொழுது ஒரு பிஸ்கெட் இந்த பாக்கெட்டில் குறைவாக உள்ளது.

 

ஒரு பிஸ்கெட்டின் விலை சுமாராக 75 பைசா என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு நாளும் ஐடிசி நிறுவனம் 50 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்கின்றது. இவ்வாறு ஐடிசி நிறுவனம் ஒரு நாளுக்கு 50 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வீதம் மக்களை 29 லட்சம் ரூபாய் அளவுக்கு ஏமாற்றி வருகின்றது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் ஐடிசி நிறுவனம் சார்பாக பதில் அளிக்கப்பட்டது. அந்த பதிலில் “பிஸ்கெட்டுகள் அனைத்தும் எண்ணிக்கை அடிப்படையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுவதில்லை. பிஸ்கெட்டுகள் அனைத்தும் எடை அடிப்படையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றது.

அதாவது 16 பிஸ்கெட்டுகள் என்று எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் 76 கிராம் எடை என்ற அடிப்படையில் பாக்கெட்டுகளில் பிஸ்கெட்டுகள் அடைக்கப்படுகின்றது. 4.5 கிராம் எடை குறைவாக இருப்பதால் இதை மாபெரும் குற்றமாக கருத முடியாது” என்று குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து டில்லி பாபு அவர்கள் அளித்த வழக்கின் அடிப்படையில் 16 பிஸ்கெட்டுகள் இருக்க வேண்டிய ஒரு பாக்கெட்டில் 15 பிஸ்கெட்டுகள் மட்டுமே இருந்ததால் ஐடிசி நிறுவனம் பாதிக்கப்பட்ட டில்லி பாபு அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவு தொகையாக 10000 ருபாய் அதிகமாக டில்லி பாபு அவர்களுக்கு ஐடிசி நிறுவனம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.