தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள மேலும் ஒரு வைரஸ்! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

Photo of author

By Parthipan K

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள மேலும் ஒரு வைரஸ்! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில்,  கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் தொற்று பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் இரண்டு ஆண்டுகளாக பல உருமாற்றங்கள் அடைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா வைரஸின்  உருமாற்றம் அடைந்த இந்த ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகளில் இந்த ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தற்போது இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியை மிகவும் தீவிரமாக கடைபிடித்து வருகின்றன.

இந்நிலையில், மிகவும் அபாயகரமான, நியோகோவ் என்ற வைரஸ் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வைரஸ் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம் வேகமாக பரவும் தன்மையும் கொண்டுள்ளது என சீனாவில் உள்ள உகான் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும், இதனால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவர் இறக்கின்றனர் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.