மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!?

Photo of author

By Parthipan K

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!?

பத்தாம் வகுப்பு மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டன. அதில் அளவுக்கு அதிகமாக கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழக பள்ளி கல்வித்துறை பாடத்திட்டத்தின் படி பத்தாம் வகுப்பு,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது.

அதேபோல் விடை தாள்கள் அனைத்தையும் திருத்தப்பட்டு ஜூன் 20 ஆம் தேதி தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது.இந்த முறை அனைத்து பிளஸ் டூ மாணவ,மாணவிகள்   தேர்வில் நன்றாக படித்து தயாராகி எழுதிய நிலையிலும் சரியான மதிப்பெண்கள் கிடைக்காததால் பல மாணவர்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விடைத்தாள் நகலை கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தார்கள்.

பிறகு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் வழங்கப்பட்டது. இதைப் ஆய்வு செய்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல மாணவர்களின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்ட போதிலும் அதன் மதிப்பெண்களை சரியான முறையில் கூட்டி போடாதது தெரியவந்துள்ளது.

மேலும் சில மாணவர்களுக்கு 70க்கும் மேல் மதிப்பெண்கள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. கூட்டல் பிழையால் பல மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் கூட வாங்க முடியாத அளவிற்கு தேர்வு முடிவு வந்தது. ஒரு சில மாணவர்கள் விடைத்தார்களில் 76 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் அவருக்கு ஆறு மதிப்பெண்கள் என முகப்பில் பதிவு செய்தது தெரியவந்தது.

அரசு பொது தேர்வு துறை நடத்திய விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள இந்த கூட்டல் பிழை மாணவ,மாணவியர் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பல மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து விடைத்தாள்  விண்ணப்பிக்காத மாணவர்கள் தங்களுக்கும் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டு இருந்திருக்குமா என்று கவலை அடைந்தனர்.

கூட்டல் பிழை செய்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் விடைத்தாளை ஆய்வு செய்யாத தலைமை திருத்துனர்கள் மற்றும் துறை ஆய்வாளர்கள் அவர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடைத்தாள் நகலை வாங்க இன்னும் கூடுதல் அவகாசம் வழங்கவும்  என சிறு கோரிக்கையும் கேட்டிகொண்டனர்.