சீனாவை தவிர்த்து சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைப்பு!!
காலணி மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி பிராண்டாக செயல்பட்டு வரும் அடிடாஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் தனது திறன் மையங்களை கொண்டுள்ளது. தற்போது சீனாவை தவிர்த்து ஆசியாவில் முதல் சர்வதேச திறன் மையத்தை(ஜிசிசி) சென்னையில் கட்டமைக்க உள்ளது.
அடிடாஸ் நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியுள்ள பவேரியாவில் செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவில் தனது முதல் திறன் மையத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அடிடாஸ் திறன் மையம் கட்டமைக்கப்பட இருக்கிறது. இந்திய திறன் மையத்திற்கு தலைவராக சென்னையில் பணியாற்ற அகில் கபூர் அடிடாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரது தலைமையில் இந்த திறன் மையத்தின் கொள்முதல், நிதி நிர்வாகம் மற்றும் ஆய்வு கட்டணங்கள், செலவினங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்த மூன்று முதல் ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகளுக்குள் அதிக திறன் கொண்டவர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது