சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம்!
தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மே 9 ந் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கும் என தகவல்.
தமிழகத்தில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று விடுபடைந்தது. பொதுத்தேர்வு முடிவுகள் வரும் எட்டாம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே வரும் கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள 633 சுயநிதி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 8-ம் தேதி பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியான பின்பு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என தனியார் கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகள் பொறுத்த வரை பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிட்ட பின்னர். மே ஒன்பதாம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என உயர்கல்வி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் மே 9ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.