வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டிக்கு ரூ.1000 அபராதம்! என்ன கொடுமை சார் இது? – போலீஸ் செய்த அட்ராசிட்டி!

0
193
#image_title

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டிக்கு ரூ.1000 அபராதம்! என்ன கொடுமை சார் இது? – போலீஸ் செய்த அட்ராசிட்டி!

வேலூரில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டிக்கு திருவண்ணாமலையில் ரூ.1000 அபராதம்! என்ன கொடுமை சார் இது? என புலம்பும் வகையில் போக்குவரத்து போலீஸ் அட்ராசிட்டி.

ஏதோ ஒரு எண்ணை குறித்துக் கொண்டு அபராதம் விதிக்கிறார்கள் – என் பையனுக்கு இரண்டு முறை அபராதம் போட்டிருக்காங்க – புலம்பி தள்ளிய திருவண்ணாமலை காவல்துறை அதிகாரி!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வன உயிரியல் ஆர்வலர் முகிலன்(32). இவர் தனியார் வங்கி மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவரின் டூ வீலர் தொரப்பாடியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருவண்ணாமலை போக்குவரத்து போலீசார் டூவீலருக்கு ரூபாய் 1000 அபராதம் விதித்துள்ளதாக நேற்று இரவு சுமார் 11 மணிக்கு செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதனைப் பார்த்த முகிலன் வீட்டில் இருந்த வண்டிக்கு மாவட்டத்தை கடந்து திருவண்ணாமலையில் அபராதமா? என அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை இதுபோல காரணமே இல்லாமல் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இது மூன்றாவது முறையாக போலீசார் அபராதம் விதித்திருப்பதாகவும் முகிலன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து முகிலன் அளித்த பேட்டியில்.  திருவண்ணாமலைக்கு சென்று சுமார் ஒன்றரை வருடம் ஆகிறது. வீட்டில் இருந்த வண்டிக்கு எதன் அடிப்படையில் அபராதம் விதித்தார்கள் என்றே தெரியவில்லை. போலீசார் டார்கெட்டை முடிக்க வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு எண்ணை வைத்து ஆன்லைனில் அபராதம் போடுகிறார்கள். இந்த மாதிரியான சம்பவங்களால் ஆன்லைன் அபராத முறை நம்பகத்தன்மையை இழக்க செய்வதாக உள்ளது என வேதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக திருவண்ணாமலை காவல்துறை அதிகாரி ஒருவரிடம் அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு,’அட ஏன் சார்.என் பையனுக்கே இரண்டு முறை அபராதம் போட்டு இருக்காங்க. ஹெல்மெட் மற்றும் ஆவணங்கள் இல்லாம வெளியவே போக மாட்டார். ஆனால்,எதுக்கு போட்டாங்க என்றே தெரியவில்லை. அபராதம் விதிப்பதற்கு வழிமுறைகள் இருக்கு.

வண்டியை நிறுத்தி விசாரித்து தான் போக்குவரத்து விதிகளை மீறி இருந்தால் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து போலீசார் அதிகாரிகள் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்காமல் ஏதோ ஒரு எண்ணை குறித்துக் கொண்டு அபராதம் விதித்து வருவது உண்மைதான். ஒரு சில போலீசார் செய்யும் செயல்களால் ஆன்லைன் அபராதம் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது,’ என்றார்.

author avatar
Savitha