தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் ரெடி! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

0
273
#image_title

தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் ரெடி! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலில் கழக வேட்பாளராக போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 19.02.2024 முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமை கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து 01.03.24 முதல் 07.03.2024 மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை ரூ. 2000 விதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்”.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous articleசெந்தில் பாலாஜியை வச்சு செய்யும் அமலாக்கத்துறை… 20வது முறையாக காவல் நீட்டிப்பு!
Next articleகிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் – அமைச்சர் சிவசங்கர் பேச்சு!