பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

Photo of author

By Amutha

பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

Amutha

பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள 5 சமையலர் மற்றும் சலவையாளர் போன்ற பணியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டை. என்கிற முகவரியில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்குள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கவும். 

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாமல்லபுரம், திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும ஈஞ்சம்பாக்கம் அரசு புறநகர் ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள 3 பல் மருத்துவ உதவியாளர் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற மார்ச் 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட முகவரியில் விண்ணப்பிக்குமாறு கூறப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.