மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!!

0
175
Apply for electronic job transfer!! No time limit!!
Apply for electronic job transfer!! No time limit!!

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!!

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி அமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் கே.மொழியரசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

எனவே பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிக்க விரும்புவோரும், இடமாற்றம் கிடைக்காமல் இருப்போரும் வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பங்களை இதற்கான அதிகாரியிடம் அளிக்க வேண்டும். மேலும், இந்த விண்ணப்பங்களை ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்படுவதால், இதற்கு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிப்பில் வெளியாகியுள்ளது.

இதற்கு விண்ணப்பித்தவர்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை இதனுடைய பொறுப்பு அதிகாரி ஜூலை 15 ஆம் தேதி துவங்கி ஒரு வாரத்திற்குள் இதை இனையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அவர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசால் எச்சரிக்கப்படுகிறது. எனவே பணியிட மாற்றம் விரும்புபவர்கள் உடனடியாக நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு மின் உற்பத்தியின் பொறியாளர் கே.மொழியரசி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!
Next articleநடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை!! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!!