முடி உதிர்தல் நிற்க இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்!! நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!!

0
360
#image_title

முடி உதிர்தல் நிற்க இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்!! நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!!

முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலையில் புதிய முடி வளர வைக்க இந்த எண்ணெயை தயாரித்து தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய்
2)தேங்காய் எண்ணெய்
3)நல்லெண்ணெய்
4)கருஞ்சீரகம்
5)கறிவேப்பிலை

செய்முறை:-

பத்து பெரிய நெல்லிக்காயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 1/4 கைப்பிடி அளவு கறிவேப்பிலையை வாணலியில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்த கறிவேப்பிலை மற்றும் கருஞ்சீரகம் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.பிறகு அதில் நறுக்கிய பெரு நெல்லிக்காயை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அரைத்த கறிவேப்பிலை மற்றும் கருஞ்சீரகப் பொடியை சேர்க்கவும்.அதன் பின்னர் அரைத்த நெல்லிக்காய் பேஸ்ட்டை அதில் சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை தினமும் இரவு தலைக்கு அப்ளை செய்து வாந்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

Previous articleKerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் கோதுமை பாயாசம் – அனைவரும் விரும்பும் சுவையில் செய்வது எப்படி?
Next article90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!!