விரைவில் அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் விரைவில் நடத்தப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 20ம் தேதி அஇஅதிமுகவின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், உணவு சரியில்லையே என்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், மாநாடு மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிமுக தலைமை செயலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். மாநாட்டில் பிறகு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடத்தப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் மாநாடு முடிந்து 20 நாட்கள் மேலாகியும் இன்னும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. எனவே இந்த மாதத்திற்குள் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறும் என்று தெரிகிறது..
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்:-
தற்போது அதிமுக கட்சியில், மாணவர் அணி, தொண்டர் அணி. தகவல் தொழில்நுட்பப் பிரிவு, அம்மா பேரவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள நிர்வாகிகள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் இருப்பதால் அவர்களை நீக்கிவிட்டு முழுவதும் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆதரவாளர்கள் மட்டும் கட்சியில் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று எடப்பாடியார் தரப்பு திட்டமிட்டுள்ளார். இனிமேல் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் பின்புலத்தை ஆராய்ந்து தான் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் அண்ணா திமுகவினர் உள்ளனர்.