டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை!!

0
32
#image_title

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் புதிய சாதனை!!

24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் செர்பியாவின் நட்சத்திர வீரரான நோவக் ஜோகோவிச் பெற்றுள்ளார். இதன்மூலம் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக அவர் வலம் வருகிறார்.

download 1 2

தற்போது நோவக் ஜோகோவிச் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார் . ஜோகோவிச் மேலும் ஏழு முறை சாதனை படைத்தார். அவர் 24 கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார், இதில் பத்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்கள் அடங்கும். ஒட்டுமொத்தமாக, அவர் 96 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார் என்பதே மாபெரும் சாதனை ஆகும்.

டென்னிஸ் வரலாற்றில் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் (ஒற்றை ஆட்டம், இரட்டை பிரிவு, கலப்பு பிரிவு) ஒரே நேரத்தில் போட்டிகளில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டங்களை கைபற்றி ஒரே டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மட்டுமே.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:-

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் செர்பியா நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், ரஷ்யா வீரர் டெனில் மெத்வதே ஆகியோர் மோதினர்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தும் விதமாக விளையாடினார் ஜோகோவிச். இதையடுத்து முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்தடுத்த செட்களில் 7-6, 6-3 என்ற கணக்கில் டெனில் மெத்வதேவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் 24வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார், நோவக் ஜோகோவிச்.

டென்னிஸ் விளையாட்டு உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள நோவக் ஜோகோவிச் இன்னும் யாரும் எட்ட முடியாத சாதனைகளை அவர் நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் டென்னிஸ் விளையாட்டில் பல்வேறு கோப்பைகளை வென்று டென்னிஸ் விளையாட்டு பிரபலமடைய செய்வது தனது குறிக்கோள் என்று நோவக் ஜோகோவிச் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K