இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!!
அதிமுக இரட்டை தலைமை விவகாரம் ஆரம்பித்தது முதல் கட்சியானது இரு அணிகளாக பிரிந்து ஒற்றை தலைமை யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து பெருமளவில் எதிர்பார்த்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் யின் மேல் முறையிட்டு வழக்கிற்கு தீர்ப்பளித்து உத்தரவிட்டு உள்ளது.
அதில் பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என கூறியுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனை ஓபிஎஸ் தனது சாதகமாக எடுத்துக்கொண்டு தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து மனு கொடுக்க உள்ளார். அதாவது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் அவர்கள் வழக்கு தொடரலாம் என்று எண்ணி வருகிறாராம். உச்சநீதிமன்றமும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தீர்ப்பு எதுவும் அதனை பாதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது ஒரு பக்கம் ஓபிஎஸ் அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதால், சிவில் வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும் வரை பழைய நிலையை தொடர வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் முன் வைக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அவ்வாறு ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று பழைய நிலை தொடரும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தால் பொதுச்செயலாளராக ஓபிஎஸ் அவர்களே தொடர முடியும் என கூறுகின்றனர். அதேபோல மற்றொருபுறம் தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியம் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதாக கூறுகின்றனர்.
இவர்களின் இருவர் கோரிக்கையில் தேர்தல் ஆணையம் எதை ஏற்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பின்னடைவை சந்திப்பார் என்பது சற்று சந்தேகம்தான்.பாஜக ஓபிஎஸ் அவர்களுக்கு அதிகளவு ஆதரவளிக்காமல் ஒரு விதத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவளித்து வருகிறது. இதனை நாம் அண்ணாமலை நடவடிக்கை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.தற்பொழுது மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையத்தை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது என்று கூறி வருவது போல தமிழகத்திலும் அந்நிலை தொடரலாம் என கூறுகின்றனர்.