இஸ்லாமியர்களுக்கு பாஜக வேட்பாளர் விடுத்த நேரடி சவால்… ஜமாத் கட்டுப்பாட்டால் ஆவேசம்…!

0
149
Annamalai
Annamalai

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டாம் என ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளப்பட்டி ஜமாத் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பெண்களின் பர்தா, கோஷா பேணுதல் முக்கியமானதாகும். சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக பெண்கள், பொதுக்கூட்டங்களுக்கு செல்வதும், வீடு வீடாக வாக்குசேகரிக்க செல்வதும் பெரும் வருத்தத்திற்கும், கண்டிப்பிற்கும் உரிய விஷயமாகும். இதற்கு முன்னதாக ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்தது போல், பெண்கள் பொதுக்கூட்டங்களுக்கோ, வாக்குசேகரிப்பிற்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பாக பள்ளப்பட்டி நகர ஜமாத் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசியதாவது: பள்ளப்பட்டிக்குள் பாஜக பிரசார வண்டி செல்லும். பிரசாரத்திற்கு எங்களுக்கு ஜமாத் அனுமதி தேவையில்லை. நான்கு நாட்கள் அங்கு பிரசாரம் செய்ய உள்ளேன். பள்ளப்பட்டியும் இந்தியாவிற்குள் தான் இருக்கிறது. யாரோ 8 பேர் கையெழுத்து போட்டுவிட்டால், யாரும் உள்ளே வரக்கூடாது எனக்கூற முடியாது.

அதேபோல் குரான் ஓத தெரிந்த இஸ்லாமிய சகோதரன் என்னோடு பொது மேடையில் விவாதம் நடத்த வேண்டும். பாஜக அரசு இஸ்லாமிய பெண்களுக்காக செய்த முத்தலாக் தடை சட்டம், இஸ்லாமியருக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும். பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். இஸ்லாம் குறித்து என்னுடன் யாராவது பேச வர வேண்டும். பள்ளப்பட்டிக்குள் எந்த கட்சியும் உள்ளே வரக்கூடாது என ஜமாத்தில் அறிவிப்பதை விட அனைவரையும் திமுகவாக மாற்றி விடுங்கள் என கடுமையாக பேசியுள்ளார்.

வேட்புமனு நிறுத்தி வைப்பு குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, பாஜக அலுவலக திறப்பு விழா உள்ளிட்ட காரணங்களுக்காக என் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஆனால் திமுக வக்கீல்கள் வேண்டுமென்றே என் வேட்புமனுவை ஏற்க கூடாது எனக்கூறினார். ஆனால் என் வேட்புமனுவில் நியாயம் இருந்ததால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.

Previous articleமுடிந்தது வேட்புமனு பரிசீலனை! இன்று வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல்!
Next articleஅதிர்ச்சியில் மருத்துவர்கள்..! மனிதர்களிடம் இருந்து பூனைக்குமா..?