- இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்!
தற்போதுள்ள காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு வருகின்றது. மற்ற நாடுகளுக்கும் நமக்கும் மாரடைப்பு நோயில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது மற்றும் நாடுகளை காட்டிலும் நம்முடைய நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை குறைந்தபட்சம் 30ல் லிருந்து45 வயதினருக்கு அதிகம் பாதிப்பு மட்டுமின்றி அதன் வீரியமும் விளைவுகளும் அதிகமாகவே உள்ளது.
மாரடைப்பு என்றால் என்ன:
மாரடைப்பு என்பது ரத்த நாடுகள் கொண்டு செல்லும் ரத்தத்திலிருந்து இதயம் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் பெறுகின்றது இந்த ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதய தசைகள் ரத்தம் கிடைக்காமல் இருக்கின்றது இதனையே மாரடைப்பு என கூறப்படுகின்றது.
ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகின்றது:
உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக இருக்கின்றது. அந்த முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் நாம் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே நூல் போல கொழுப்புச்சத்து படிய துவங்குகின்றது காலப்போக்கில் சில காரணங்களால் அந்த கொழுப்புச்சத்து வளர்ந்து கொழுப்பாக படிவம் ஆகி ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடையாக உருவாகின்றது.
ஒரு கட்டத்தில் அவை விரிசல் ஏற்பட்டு ரத்தக்குழாய் நூல் வெடிக்கின்றது இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசலில் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து ரத்தக்குழையை முழுமையாக அடைத்துக் கொள்கின்றது.
மாரடைப்பு ஏற்பட காரணம்:புகைப்பிடித்தல் ,உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு குறைவாக இருப்பது ,உடல் உழைப்பு இல்லாமல், அதிக கொலஸ்ட்ரால், ஜீன்கள், மன அழுத்தம் ,அதீத கோபம் மற்றும் படபடப்பு போன்றவைகள் தான். இவ்வாறு உங்களுக்கு தென்பட்டால் அவை மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்று உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.