கர்ப்பிணிகள் வாழைக்காயை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படுமா? அலசுவோம்

0
157

கர்ப்பிணிகள் வாழைக்காயை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படுமா? அலசுவோம்

வாழை மரத்தில் வேர் முதல் இலை வரை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதிலும், வாழைக்காய்யில் மாவுச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கர்ப்பிணிகள் அளவோடு வாழைக்காயை சாப்பிடலாம். இதனால் தீங்கு வராது.

சரி கர்ப்பிணிகள் வாழைக்காயை சாப்பிட்ட என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் –

வாழைப்பழம் போன்றே வாழைக்காயில் நார்ச்சத்து உள்ளது. செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை போக்கும். வாழைக்காய்  ஆரோக்கியமான கர்ப்பத்தை ஊக்கப்படுத்தும். வாழைக்காயில் உள்ள நியூரோடாக்சின் தாய் மற்றும் கர்ப்ப ஆரோக்கியத்தை பாதிக்க உதவி செய்கிறது.

வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் வாழைக்காயில் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கச் செய்கிறது.

வாழைக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தோலின் நிறத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

வாழைக்காய் டையூரிடிக் ஆக செயல்பட்டு சீரான சிறுநீர் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

வாழைக்காயில், ஃபோலேட், தயமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் இருப்பதால், குறைப் பிரசவ அபாயத்தை தடுக்கச் செய்கிறது.

வாழைக்காயில் மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கால்சியம் தாதுக்கள் இருப்பதால் எலும்புகளை வலுவுப்பெறச் செய்கிறது. இது கருவிற்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு வாழைக்காய் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது. இது மூல நோய் அபாயத்தை தடுக்கிறது.

கர்ப்பிணிக்கு பக்கவிளைவுகள் ஏற்படுமா?

வாழைக்காயில்  ஃபோலேட்டுகள், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் தயமின் ஆகியவை இருப்பதால், கர்ப்பத்திற்கு நன்மை பயக்கிறது. மேலும், போலேட்டுகள் அல்லது ஃபோலிக் அமிலம் ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு மிக முக்கியமானது. வாழைக்காயை மசித்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம். ஆனால், எண்ணெயில் பொரித்து, வறுத்து சாப்பிடக்கூடாது.

Previous articleபெண்களே.. மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர இப்படி செய்யுங்க போதும்!!
Next articleஅட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இளநரையை கருமையாக்க இப்படி கூட செய்யலாமா?