ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி,உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் 12 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் 4 காலிபணியிடம் என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேலும் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலமாக முற்றிலும் தொகுப்பூதியம் முறையில், தற்காலிகமாகவும்,நிபந்தனையின் மூலமாகவும் நிரப்பப்பட இருகின்றது.இந்த பணியிடங்களுக்கு ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 7,500 மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ 10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு கல்வி தகுதியானது அரசு ஆசிரியர் தகுதிக்கு தற்போது நடைமுறையில் வைத்துள்ள கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக இருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.காலிப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க தகுதி உடையவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் உரிய கல்வித் தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.