வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!!

0
136
Good news for motorists!! No more penalty for all this!!
Good news for motorists!! No more penalty for all this!!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!! இதற்கெல்லாம் இனி நோ அபராதம்!!

புதுச்சேரியில் போக்குவரத்து துறை ஆனது தற்பொழுது 15 ஆண்டுகளாக இயங்கும் வாகனங்கள் அனைத்திற்கும் தகுதி சான்றிதழ் என ஆரம்பித்து அபராதம் வரை என அனைத்திற்கும் எல்லையில்லா பட்டண உயர்வை உயர்த்தியது.

இதனை வாகன உரிமையாளர்கள் பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு கட்டண உயர்வினால் பெரும் பாலானோரால் கட்டண உயர்வை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி தற்பொழுது தான் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் இவ்வாறு கட்டண உயர்வானது பொருளாதார ரீதியாக இவர்களை பெரிதாக பாதிக்க செய்யக்கூடும்.

எனவே வாகன உரிமையாளர்கள் பலர் இதனை எதிர்த்து போராட்டத்திலும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சிஐடியு என்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் இது குறித்து மனு அளித்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம்,வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் என ஆரம்பித்து அபராதம் தாமதமாக கட்டுதல் என அனைத்திற்கும் உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

இவ்வாறு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்ததை அடுத்து சிஐடியு சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தற்பொழுது நமது கோரிக்கை கேட்டு நீதிமன்றம் அளித்துள்ள கட்டண உயர்வுக்கான தடை உத்தரவானது அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக காணப்படும்.

அந்த வகையில் இனி வாகன தகுதி சான்றிதழ்காக கட்டணம் 4400 இல் இருந்து 700 ஆக குறைக்கப்படும் எனவும், வேன் டெம்போ டாக்சி போன்றவற்றைகளுக்கு 8,700 இல் இருந்து 700 ஆக குறைக்கப்பட்டு வசூல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல இனி காலதாமதமாக அபராதம் கட்ட சென்றால் அதற்கென்று 50 ரூபாய் வசூலிப்பதும் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளனர்.