பாத வெடிப்புகள் குணமாகவில்லையா… அப்போ இந்த ஒரு உருளை கிழங்கை இப்படி பயன்படுத்துங்க… 

Photo of author

By Sakthi

பாத வெடிப்புகள் குணமாகவில்லையா… அப்போ இந்த ஒரு உருளை கிழங்கை இப்படி பயன்படுத்துங்க…

 

பல வகையான மருந்துகளை பயன்படுத்தியும் பெண்களுக்கு இருக்கும் பாத வெடிப்புகள் குணமாகாமல் இருக்கும். இதை சரி செய்ய இந்த பதிவில் அருமையான இயற்கை முறையிலான மருந்தை தயார் செய்து பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்தா கொள்ளலாம்.

 

பாத வெடிப்புகள் பொதுவாக நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து பாதத்தில் வறட்சி ஏற்படுவதால் பாதத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றது. பெரும்பாலும் குளிர்காலத்தில் பாத வெடிப்புகள் அதிகமாக ஏற்படுகின்றது. இந்த பாத வெடிப்புகளை குணமாக்க இந்த பதிவில் இயற்கையான வழிமுறையை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* தேங்காய் பால்

* சோடா உப்பு

* பச்சரிசி மாவு

* உருளைக் கிழங்கு

* நெய்

 

செய்முறை

 

முதலில் ஒரு பவுலில் உருளைக் கிழங்கை துருவி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சோடா உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

சப்பாத்தி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இதில் சிறிதிளவு தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு இதை கலந்து கொண்டால் பாத வெடிப்புகளை போக்கும் மருந்து தயாராகி விட்டது.

 

இந்த மருந்தை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பாத வெடிப்புகள் படிப்படியாக மறையத் தொடங்கும்.