மாணவர்களே ரெடியா?? 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

0
145
Are the students ready?? 10th Class Supplementary Results Released Today!!
Are the students ready?? 10th Class Supplementary Results Released Today!!

மாணவர்களே ரெடியா?? 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இம்மாதம் 2 ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது.

அந்த துணை தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் 24 ம் தேதி வெளியிட்டப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு வெளியிடப்படும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளின் தற்கால மதிப்பெண் சான்றிதழை அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் முடிவுகளில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும் மாணவர்களுக்கு உத்தவிடப்பட்டுள்ளது.

இதனை ஜூலை 27 மற்றும்  28 ஆம் தேதிகளில் மறு கூட்டலுக்கு  மாணவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபிரம்மாண்டமாக துவங்க இருக்கும் அண்ணாமலையின் நடைப்பயணம்!! ஏற்பாடுகள் தீவிரம்!!
Next article50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!! தொடங்கி வைக்க உள்ள முதலமைச்சர்!!