மாணவர்களே தயாராகுங்கள்! இன்று முதல் தொடங்குகிறது மருத்துவ கலந்தாய்வு!

0
81

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டு இருக்கின்ற11 கல்லூரிகள் உட்பட ஒட்டு மொத்தமாக 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும், இருக்கின்றன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 6999 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன, அதேபோல 2 அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 1930 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன.

இதனை தவிர்த்து சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1145 எம்பிபிஎஸ் இடங்களும், 635 டிடிஎஸ் இடங்களும், இருக்கின்றன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

முதல் நாள் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெற இருக்கிறது.

இதற்கு அடுத்த 2 நாட்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறும் அதன் பிறகு எதிர்வரும் 30ஆம் தேதி முதல் பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை இணையதளங்கள் மூலமாக நடைபெற இருக்கிறது.