இந்த காரணத்திற்காக பரோல் வழங்க இயலாது! உயர் நீதிமன்றம் அதிரடி!

0
60

கோயமுத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கின்ற தன்னுடைய கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரவல் வழங்கவேண்டும் என்று தெரிவித்து அவருடைய மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக இரண்டு வாரங்கள் பரவல் வழங்கப்பட்ட சூழ்நிலையில், இரண்டாவது முறையாக மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், தாம்பத்திய உரிமைகள் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்ற காரணத்தால், இது தொடர்பான விரிவான தீர்ப்பு வழங்கும் விதத்தில் வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு உள்ளிட்டோர் அடங்கிய முழு அமர்வு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தீர்ப்பில், தண்டனை கைதி ஒருவர் சாதாரண பொது மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க அனுமதிக்க இயலாது. அப்படி அனுமதிப்பது சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கும், வித்தியாசம் இல்லாமல் போய்விடும் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமையை வழங்க இயலாது என்று முழுமையான அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.