பற்கள் மஞ்ச மஞ்சளாக இருக்கின்றதா… அப்போ இந்த ஒரு உருண்டையை வைய்யுங்க… மஞ்சள் பள் வெள்ளை ஆகிரும்!!

Photo of author

By Sakthi

 

பற்கள் மஞ்ச மஞ்சளாக இருக்கின்றதா… அப்போ இந்த ஒரு உருண்டையை வைய்யுங்க… மஞ்சள் பள் வெள்ளை ஆகிரும்…

 

மஞ்சள் நிறத்தில் இருக்கும் பற்களை பால் போன்ற வெள்ளை நிறமாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

 

நம்மில் சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். ஒரு சிலருக்கு பற்கள் பால் போன்ற வெள்ளை நிறமாக இருக்கும். பற்கள் வெள்ளை நிறமாக இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அதுவே மஞ்சள் நிறமாக இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும்.

 

பற்கள் வலி ஏற்படுவது, பற்கள் அரித்தல், விரைவாக பற்கள் விழுதல் போன்ற பல பெரிய பிரச்சனைகளுக்கு இந்த மஞ்சள் நிறம் ஆரம்பப் புள்ளியாக இருக்கின்றது.

 

மஞ்சள் நிறமாக இருக்கும் பற்களை வெள்ளை நிறமாக நாம் பல பற்பசைகளை(டூத் பேஸ்ட்) பயன்படுத்துவோம். அவை அனைத்தும் நமது பற்களின் மஞ்சள் கரையை நீக்குமா என்று கேட்டால் இல்லை. இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மருந்தை பயன்படுத்துங்கள். மஞ்சள் நிறத்தில் உள்ள பற்கள் பால் போன்று வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.

 

மஞ்சள் கரையை நீக்கும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* ஏதாவது ஒரு பேஸ்ட்(கோல்கேட், டாபர் ரெட், க்ளோஸ் அப்)

 

* பயோரியா பல்பொடி

 

* கடுக்காய் பொடி

 

* சோடா உப்பு

 

* எலுமிச்சை

 

 

தயார் செய்யும் முறை…

 

ஒரு சிறிய பவுலில் பயோரியா பல்பொடி தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு கடுக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சோடா உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

இறுதியாக இதில் எடுத்து வைத்துள்ள பற்பசையை சேர்த்து இதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு இதை பிசைந்து கொள்ள வேண்டும். இதை அப்படியே சிறு சிறு உருண்டையாக செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த உருண்டைகளை காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்து தினமும் பயன் படுத்தலாம்.

 

பயன்படுத்தும் முறை…

 

இந்த உருண்டைகளை தினமும் ஒன்று வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு எலுமிச்சை தோலில் உள்ள சிட்ரிக் ஆசிட் அதாவது எலுமிச்சை தோலை அழுத்தினால் வரும் திரவத்தையும் இந்த உருண்டையையும் வைத்து நாம் மஞ்சளாக இருக்கும் பற்களின் மேல் வைத்து தேய்க்க வேண்டும்.

 

இவ்வாறு தினமும் செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் நீங்கி பால் போன்று வெள்ளையாக நம் பற்கள் மாறிவிடும்.