இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி : சென்னை தயார்!!

0
39

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி :சென்னை தயார்

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே மிகவும் சுவாரசியமாக இருக்கும்.அது கிரிக்கெட் என்றாலும் சரி, ஹாக்கி என்றாலும் சரி அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்ப்பார்கள்.அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த ஹாக்கி போட்டி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் போட்டியாக நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணி அவர்களுடைய முதல் போட்டியை 7-0 என்ற விகிதத்தில் சீனாவையும், 1-1 என்று ஜப்பானையும் ,5-0 என்று மலேசியாவையும் வெற்றிவாகை சூடி உள்ளது.

இதுவரை நடந்த லீக் லீக் ஆட்டங்களில் இந்திய அணி மட்டுமே இதுவரை தோற்காத அணியாக வலம் வருகிறது மேலும் சர்வதேச அளவில் இந்திய ஹாக்கி அணி நான்காவது இடத்தில் உள்ளது,அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி 14 வது இடத்தில் உள்ளது.

இந்த போட்டி குறித்து போட்டிக்கு முன்னதாக பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் இந்திய அணியின் ஆட்ட பாணி அட்டாக்கிங் ஹாக்கி முறையில் விளையாடி வருவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இந்த டிராபிக் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.நாம் இந்த போட்டியை நன்றாக தொடங்கி நன்றாக முடிக்க வேண்டும் மற்றும் வரும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பாகிஸ்தான் அணி குறித்து கூறும் போது இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் சரி பலம் வாய்ந்த அணிகளாக இருந்தது என்றும் தற்பொழுதும் அவர்கள் அதே பழைய பாணியில் தங்களுடைய ஹாக்கி ஆட்டத்தை கடை பிடிப்பதாகவும் கூறியுள்ளார் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

 

author avatar
Savitha