தினமும் பீனட் பட்டர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா… அதுவும் காலையில் தான் சாப்பிடனுமா…

Photo of author

By Sakthi

 

தினமும் பீனட் பட்டர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா… அதுவும் காலையில் தான் சாப்பிடனுமா…

 

நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் நாம் அனைவரும் சத்தான உணவுகளை தவிர்த்துவிட்டு உடலுக்கு தீங்கு அளிக்கும் வகையிலான உணவுகளை நாம் உண்கிறோம். இதனால் தான் நமக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. இதையெல்லாம் தவிர்க்க ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள மற்றும் விலை குறைவாக உள்ள பீனட் பட்டரை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

பீனட் பட்டரில் உடலுக்குத் தேவையான வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச் சத்துக்கள் அதிகளவு உள்ளது. இந்த பீனட் பட்டரை தினமும் காலையில் உண்பதால் அதிகளவு நன்மைகள் கிடைக்கின்றது.

 

பீனட் பட்டரை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்…

 

* பீனட் பட்டரில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இதை தினமும் காலையில் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

 

* தினமும் காலையில் பீனட் பட்டர் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் அனைவரும் பீனட் பட்டரை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடல் எடை குறையும்.

 

* பெண்கள் தினமும் காலையில் பீனட் பட்டர் உண்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். பீனட் பட்டர் சாப்பிடும் பெண்களுக்கு 40சதவீதம் மார்பகப் புற்றுநோய் குறைக்கப்படுகின்றது.

 

* தினமும் காலை வேலையில் பீனட் பட்டர் சாப்பிடுவதால் நமது கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. இன்றைய.காலத்தில் நாம் அனைவருடைய.கண்களும் கம்பியூட்டர் அல்லது லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன்களின் திரையில் இருக்கின்றது. இதனால் கண்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இந்த பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாக்க நாம் அனைவரும் தினமும் காலையில் பீனட் பட்டரை சாப்பிட்டு வரலாம்.

 

* பீனட் பட்டரில் நார்ச்சத்துக்கள் அதிகளவு இருப்பதால் நாம் தினமும் காலையில் பீனட் பட்டரை சாப்பிட்டு வந்தால் நமக்கு ஏற்படும் செரிமானப் பிரச்சனையை குணமாக்கலாம்.

 

* வேர்க்கடலையில் இருந்து பீனட் பட்டர் தயாரிக்கப்படுகின்றது. வேர்க்கடலையில் சிறுநீரகத்தை பாதுகாக்கும் குணம் உள்ளது. இதனால் பீனட் பட்டர் உணவை நாம் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் பாதுகாக்கப்படும். மேலும் சிறுநீரகக் கல்லும் கரையும்.