வாழைத்தண்டில் இத்தனை பயன்கள் இருக்கின்றதா? இவர்கள் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!
வாழைத்தண்டில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.பொதுவாகவே வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழைப்பழம், வாழைத்தண்டு,வாழைப்பூ இவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலமாக காணலாம்.
வாழைத்தண்டில் அதிகப்படியான நிறைந்துள்ள பொட்டாசியம்,வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம், காப்பர், ஐயன் என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழை பூ மற்றும் வாழைக்காய் இவற்றில் இரண்டிலும் விட வாழைத்தண்டு மிகவும் மருத்துவமனை நிறைந்ததாகும்.
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். வாழைத்தண்டுக்கு அதிகப்படியான சிறுநீரை பெருக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதன் விளைவாக சிறுநீர் பாதைகளில் இருக்கக்கூடிய சிறிய அளவுள்ள கற்களை வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளது.
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் வாழைத்தண்டு சாரு மற்றும் சிறிதளவு எலுமிச்சை இரண்டையும் சேர்த்து பருக வேண்டும். இதன் விளைவாக சிறுநீரக கற்கள் குணமடைய உதவும். வாழைத்தண்டில் உள்ள சுவையானது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் வாழ தண்டனை சேர்த்துக் கொள்வது நல்லதாகும்.
பொதுவாகவே உடலை குறைக்கக்கூடிய தன்மை வாழைத்தண்டில் மிகவும் நிறைந்துள்ளது. 100 கிராம் வாழைத்தண்டில் 42 கலோரிகள் உள்ளது.உடல் எடையை குறைப்பவர்கள் தினசரி வாழத்தண்டினை பொரியலாகவோ அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.
அதிகப்படியான ரத்த அழுத்தத்தினால் அவதிப்பட கூடியவர்கள் வாழைத்தண்டினை உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளும் பொழுது இவ்வித பிரச்சனையும் குணமாக உதவுகிறது.வாழைத்தண்டில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதயத்தில் உள்ள ரத்த நாளங்கள் சீராக செல்வதற்கு உதவுகிறது.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது.