தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா??

0
867

தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா??

ஊர் காவல் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நோய் நொடி நம்மை பாதுகாக்கும்.இதில் நல்ல முற்றிய தேங்காயாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக உடைத்து மேலிருக்கும் நார் போன்றவற்றை சுத்தமாக நீக்கி அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

ஆசையாக கட்டிய வீட்டை பாதியில் கட்ட முடியாமல் அப்படியே விடுபவர்கள் உண்டு. சில இடங்களில் அதை விற்று விடுபவர்களும் உண்டு. ஒரு வீடு கட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை அப்படியே கட்டி ஆசையாக குடி போனாலும் அங்கு ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். துர் மரணங்கள், இழப்புகள், நோய்கள் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

இது போல பிரச்சினைகள் இருக்கக்கூடிய வீடுகளில் உள்ளவர்கள் வராகி அம்மனை நினைத்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம்.எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான பரிகாரத்தை செய்யும் பொழுது அதற்கு உரிய பலன்களும் சரியான விதத்தில் கிடைக்கும். அந்த வகையில் மேற்கூறிய இந்த பிரச்சினைகளுக்கு வராகி அம்மன் படத்தை வீட்டில் வைத்து அவருக்கு முன்பாக ஒரு கலசத்தை வைத்து வழிபட வேண்டும்.

கலசம் உங்களுடைய குலதெய்வ அழைப்பிற்கானது. ஒரு செம்பு அல்லது பித்தளை கலசத்தில் பச்சரிசியை நிரப்பி அதில் சூலம் ஒன்றை சுருக்கி வையுங்கள். அதை மஞ்சள் குங்குமம், பூக்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக ஒரு பெரிய ⁶தாம்பூல தட்டில் சுத்தமான பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள்.

பின்னர் தேங்காயை இரண்டாக உடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, இரண்டு வெள்ளைத் திரிகளை அதனுள் போட்டு ஒன்றாக முனைப்பகுதியை மட்டும் திருகி எண்ணெயில் முக்கி வையுங்கள். பின்னர் திரியை மேலே பார்க்குமாறு திருகிவிட்டு நல்லெண்ணெய் ஊற்றி வராகி அம்மனை சரணடைந்து முழுமையாக மனமுருகி தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

இர6ண்டு தீபங்களை இப்படி 2 வாரங்கள் தொடர்ந்து ஏற்றுங்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஏற்றுவது சிறப்பு. நல்ல நேரம் பார்த்து ஏற்றினால் போதும். இவ்வாறு இந்த தெய்வத்திற்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்தால் தீராத பிரச்சனையும் சுலபமாக தீரும் நொடியில் மறைந்து போகும்..

Previous article2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!
Next articleகொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்!