கொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்!

0
155
    • கொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்!
    • தற்போது இந்த கால கட்டத்தில் அதிகளவு மக்கள் அனைவருக்கும் சவாலாக இருந்தது உடல் எடை தான். அந்த உடல் எடை அதிகரிக்க காரணம் மனித உடலில் தங்கியிருக்கும் அதிகளவிலான உடற்கொழுப்பு தான். உடற்கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவுப்பழக்கத்தின் மூலமாக சரிசெய்யலாம் என்கிறது ஆய்வு முடிவுகள் உடலில் சேரும் அதிக கொழுப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றிற்கான அபாய அளவினை அதிகரிக்கிறதாம்

ஹைப்பர்கொலஸ்ட்ரோலெமியா என்கிற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் அதிகப்படி கொலஸ்ட்ரால், ரத்தக்குழாய்களில் எக்கச்சக்கமாக கொழுப்பு மற்றும் எடைகூட்டும் பொருட்கள் சேர்வதால் ஏற்படுகிறது. இதனால் உடல் ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய் போன்றவற்றிற்கான வாய்ப்பு அதிகமாக்குகிறது. மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உடலில் சேரும் இந்த கொலஸ்ட்ரால் அளவினை ரத்த மாதிரி ஆய்வின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

 

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளை சரியான முறையில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை கெட்ட கொலஸ்ட்ராலிடம் இருந்து காப்பாற்ற முடியும்.

 

மேலும் ஹோல் க்ரைன்ஸ் எனப்படும் ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளுகன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்ககூடிய திறன் கொண்டது.

 

மேலும் பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து வாய்ந்தவை. இதயத்தை பாதிக்கும் ரத்தக் கொதிப்பு, ரத்தக் கொழுப்புக் கட்டிகள் ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை.

 

பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட் வகைகளையும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட இவற்றால், இதயத்திற்கும் நலம். நார்ச்சத்து, மினரல்களையும் அதிகம் கொண்ட உணவுப்பொருட்கள் ஆகும்.

 

மேலும் வீட்டில் தினம்தோறும் பயன்படுத்தும் பூண்டு நல்ல பலனை அளிக்கும். பூண்டில் இருக்கும் மருத்துவகுணம் உடலின் கொழுப்பை குறைக்கும் சக்தி வாய்ந்தது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள், உடலில் காணப்படும் கொழுப்புப்புரதத்தை குறைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது.

 

பெரிஸ் எனப்படும் பழவகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. சிவப்பு ராஸ்பெரிஸ், இனிப்பு செரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி ஆகியவை உடலின் கொழுப்பை சமநிலைப்படுத்தக்கூடியவை என்கிறது ஆய்வொன்று. ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்த இவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது.

 

எனினும், சரியான உணவு முறையுடன் மருத்துவரின் ஆலோசனையும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Parthipan K