ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடிச்சா இத்தனை நன்மைகளா?

Photo of author

By Sakthi

ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடிச்சா இத்தனை நன்மைகளா?
தினமும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடித்து வந்தால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு. டம்ளர் சூடான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து குடித்து வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. உப்பின் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பதற்கு பதிலாக உப்பு கலந்த சூடான தண்ணீரை குடிக்கலாம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் இவ்வாறு செய்வதால் தலைவலி குறையும். உடல் எடை குறையும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் தினமும் சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து குடிக்கும் பொழுது இளமையாக இருக்கவும் நாள் முழுவதும் உற்சாகமாக புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம் சூடான தண்ணீரில் உப்பு சேரும் பொழுது இதில் பல சத்துக்கள் உருவாகின்றது. எனவே இதை தொடர்ந்து செய்யும் பொழுது நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தினமும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…
* தினமும் நாம் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து குடிக்கும் பொழுது தலைவலி பிரச்சனைகள் அனைத்தும் குணமடைகின்றது.
* தினமும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து குடிக்கும் பொழுது நம்முடைய பசி உணர்வை குறைக்கும். மேலும் குடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
* தினமும் சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து குடிக்கும் பொழுது நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும். இதனால் உடல் எடை குறைகின்றது.
* தினமும் இந்த உப்பு கலந்த சூடான தண்ணீரை குடிக்கும் பொழுது தூக்கமின்மை பிரச்சனை சரியாகிவிடும்.
* தினமும் சூடான தண்ணீரில் உப்பு கலந்து குடிக்கும் பொழுது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகின்றது.
* உப்பு கலந்த சூடான தண்ணீரை குடிக்கும் பொழுது நமது உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.