தினமும் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

0
127

தினமும் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

விலை மலிவாக கிடைக்கம் கேரட்டில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. கேரட் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. கேரட் ஆரஞ்சு வண்ணம் மட்டுமல்லாது ஊதா, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற பல வண்ணங்களில் உள்ளன. கேரட்டில் வைட்டமின்கள், பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது. மேலும், கேரட் இதயம், மூளை, கல்லீரலுக்கு மிகவும் நன்மை செய்கிறது.

சரி… தினமும் காலை வெறும் வயிற்றில் கேரட்டை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் –

எடை குறைய

தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் பி உடலில் உள்ள கொழுப்பு மற்றும் புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி செய்கிறது. மேலும் மன அழுத்தத்தை குறைத்து, உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.

பெண்களுக்கு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி ஏற்படும். அப்போது தொடர்ந்து குடித்து வந்தால், இந்த அவதியிலிருந்து நல்ல நிவாரணம் பெறலாம்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் வைத்திருக்க உதவி செய்யும்.

வயிறு சுத்தமாக

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும் வயிறு சுத்தமடையும்.

கண்பார்வைக்கு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும்.

அரிப்புக்கு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு, சிவப்பு தன்மை, வேர்குரு மறைந்து விடும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.

அல்சர்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், கேரட்டில் உள்ள நீர்ச்சத்து நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பற்களுக்கு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் அழிந்து போகும். பற்களுக்கு பலம் பெறும். ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும்.

 

 

Previous articleநோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் எள் உருண்டை : 10 நிமிடத்தில் சுவையாக செய்வது எப்படின்னு தெரியுமா?
Next articleமுதுகில் பருக்கள் அதிகமாக உள்ளதா!!! அதை குணமாக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!!