அடேங்கப்பா சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

0
41
#image_title

அடேங்கப்பா சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

நம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் சின்ன வெங்காயத்தில் ருசி மற்றும் ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகிறது. இவை பெயருக்கு சின்ன வெங்காயம் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களோ அதிகம். தலை முதல் பாதம் அவரை அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இந்த சின்ன வெங்காயம் இருக்கிறது.

தினமும் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தோம் என்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும்.

சின்ன வெங்காயத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

தாது உப்புகள், வைட்டமின்கள், சல்பர், புரதம், போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வாயில் போட்டு மெல்லவும். 10 நிமிடம் வாயை மூடி கொண்டு மெல்லும் பொழுது ஏற்படும் எரிச்சலின் மூலம் தொண்டை பகுதி மற்றும் மூக்கு நாசிலில் உள்ள நுண்கிருமிகள் அழியும்.

2)காலையில் வெறும் வயிற்றில் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சாப்பிட்டால் செரிமானக் கோளாறு அகலும்.

3)சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

4)உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்ற தினமும் 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். இவை உடல் எடையை குறைத்து பிட்டாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

5)தீராத மலச்சிக்கல் பிரச்சனைக்கு சின்ன வெங்காயம் அருமருந்தாக இருக்கிறது.

6)உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் இருக்க சின்ன வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

7)நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிருநீரகத்தில் ஏற்படும் நோய் பாதிப்பை குணப்படுத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரலாம்.

8)ஜலதோஷம் இருப்பவர்கள் ஒரு சின்ன வெங்காயத்தை மென்று தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும்.