அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!
பெண்கள் வளர்ச்சி அவர்களின் முன்னேற்றம் ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு பல திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.இவை அனைத்தும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிலும் பெண்கள் நிதி ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு என்றே கடன் அளிக்கும் விதமாக மகளிர் சுய உதவிகுழு அமைக்க பட்டு இல்லத்தரசிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக தொழில் செய்யும் பெண்களுக்கு சிறப்பு கடன் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று உள்ள பெண்கள் சுயமாக தொழில் தொடங்க விரும்பினாலும் அவர்களிடம் போதிய பணம் இருப்பதில்லை.
இந்த சுழலில் அவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசானது உத்யோகினி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தொழில் தொடங்கும் பெண்களுக்கு பல்வேறு சிறப்பு கடன் வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் கிராம பகுதிகளில் பின்தங்கிய பெண்களுக்கு சுய தொழில் செய்ய விரும்பினால் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இவை அனைத்தும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்ட திட்டம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 18 முதல் 55 வரை இருக்க வேண்டும்.மேலும் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கும் கீழாக இருக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து தகுதியும் விருப்பமும் உடைய பெண்கள் இதில் கேட்கப்பட்ட ரேஷன் கார்டு ,ஆதார் கார்டு ,வருமான சான்றுதல் ,ஜாதி சான்றுதல் ,பஸ்பாஸ் ,புகைபடம் போன்ற அனைத்து ஆவணங்களையும் இணைத்து அந்த பகுதியில் உள்ள வங்கிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.